செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், லண்டனிலும் கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் இந்துக்களின் மீதான வெறுப்புணர்வு பிரச்சாரமும், இந்துக்களின் மீதான தாக்குதலும் அதிகரித்து இருக்கிறது. ஆயிரம் மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது குறித்த அமெரிக்க நாடாளுமன்றத்தில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மிகுந்த கவலையும், வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
லண்டனிலே லண்டன் அரசாங்கம் இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து அங்கே இந்து, முஸ்லிம் கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பதட்டம் நீடித்து கொண்டே வருகிறது. எனவே உலகம் முழுக்க இந்து கோவில்களின் மீதும், இந்துக்களின் மீதும் குறிப்பாக லண்டனில் நடைபெற்ற அந்த கலவர சூழ்நிலையை அதை தடுத்து நிறுத்த வேண்டும்,
இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக லண்டன் துணை தூதரகத்திலே அந்த அதிகாரிகள் இடத்தில் சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுவையும், அது சம்பந்தமாக செய்திகள், அறிக்கைகள், ஆதாரங்கள் இவற்றை இங்கே தாக்கல் செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.