Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க தலையீடு?

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி,  உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க மின்னணு கூறுகளின் குறுகீடு காரணமாக ஈரானின் ரேடார் நெட்வொர்க்கில் இடையூறு ஏற்பட்டிருக்க லாம் என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய சாத்தியத்தை விசாரிக்க ஒரு குழு அமைக் கப்பட்டு, விசாரணை நடைபெறுவதா கவும் தெரிவித்தார்.

176 பேரை பலி கொண்ட ‘விபத்து’ எனக் கருதப்பட்ட அந்த சம்பவத்தில், ஏவு கணை தாக்குதலுக்கு உள்ளான பிறகும் உக்ரைன் விமானம் வட்டமடித்து டெஹ் ரான் விமான நிலையத்திற்கு திரும்ப முயன் றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலை மானி கொலையைத் தொடர்ந்து அமெரிக் காவுக்கும் ஈரானுக்கும் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில்தான், டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த உக்ரைன் பயணிகள் விமானம் ஏவுகணைத் தாக்குத லில் வீழ்த்தப்பட்டது.

முதலில் தாக்கிய ஏவுகணை, தகவல் தொடர்புக்கான டிரான்ஸ்பான்டர்களை செயலிழக்கச் செய்துள்ளது. இரண்டாவது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமானம் தீப் பிழம்பாக வானத்தில் வட்டமடித்து திரும்ப முயற்சித்துள்ளது. ஆனால் சில விநாடி களில் தரையில் நொறுங்கி விழுந்து விட்டது. இதை உறுதிப்படுத்தும் வகை யில், ஈரான் ராணுவ தளத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிடத்தின் மேல்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

11 வீரர்கள் காயம் என தகவல்

இதனிடையே, ராணுவ தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதன் எதிரொலி யாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 11 வீரர்கள் காயமுற்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி இராக்கின் பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி காஸிம் சுலைமானி மற்றும் அவருடன் இருந்த 9 பேர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, கடந்த 8 ஆம் தேதி, இராக்கில் உள்ள அல் ஆசாத் அமெரிக்க விமானப் படைத் தளம் மீது ஈரான் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் தனது வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெ ரிக்கா கூறி வந்த நிலையில், தாக்குதலில், அதிர்ச்சி மற்றும் உள்காயம் அடைந்த 11 வீரர்களுக்கு ஜெர்மனி மற்றும் குவைத் தில் உள்ள அமெரிக்க ராணுவ மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |