Categories
உலக செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பதற்றம்: கச்சா எண்ணையின் விலை உயர்வு!

அமெரிக்கா – ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் கச்சா எண்ணையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து ஈராக், அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன் எதிரொலியாக கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராக அதிகரித்தது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக “கடுமையான பதிலடியை” கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஈரான் முன்மொழிந்தது.

இதையடுத்து அச்சம் காரணமாக பங்குச் சந்தைகள் சரிந்தன. அமெரிக்கா வெள்ளிக்கிழமை ஈராக்கில் ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சோலைமானியைக் கொன்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஈரான் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இஸ்லாமிய குடியரசில் 52 தளங்களைத் தாக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தில் இந்திய பங்குச்சந்தை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |