அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி வேற்றுகிரகவாசிகள் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் ராபர்ட் சலாஸ் என்ற ராணுவ அதிகாரி விமானப்படையின் உயர்பதவியில் பணியாற்றியிருக்கிறார். இவர், அணு ஆயுதங்களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் நான்கு பேர் இதுகுறித்த ஆவணங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றியிருக்கிறார்.
மேலும், அவர் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள் பிரிவுக்கான கமாண்டராகவும், நாட்டின் மிகவும் நவீனமான மற்றும் அபாயகரமான அணு ஏவுகணை திட்டமான Titan-3-யில் விமானப்படை ஏவுகணையின் உந்துவிசை பொறியாளராகவும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் இவர், வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்து, அணு இலக்குகளுக்கான ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து, அதனை முடக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும், வேற்றுகிரகவாசிகளால் மூன்றாம் உலகப்போர் உருவாகவுள்ளது என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பில், விசாரணை மேற்கொள்ள அமெரிக்க காங்கிரசசை வலியுறுத்த முயன்று வருவதாக கூறியுள்ளார்.