Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. நவோமி அதிர்ச்சி தோல்வி ….!!!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்  மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில்  தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும் , நடப்பு சாம்பியனுமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார் . இதில் முதல் செட்டை வென்ற ஒசாகா ,இரண்டாவது செட்டை பறிகொடுத்தார் .

இதையடுத்து பரபரப்பான நடத்த ஆட்டத்தின் இறுதியில் 5-7, 7-6 (7-2), 6-4  என்ற செட் கணக்கில் நவோமியை வீழ்த்திய  லேலா பெர்னாண்டஸ்4-வது சுற்றுக்கு முன்னேறினார் . இந்த ஆட்டம் சுமார் 2 மணி 4 நிமிடம் வரை நீடித்தது .இந்தத் தோல்விக்கு பிறகு ஜப்பான் வீராங்கனை நவோமி  ஒசாகா கூறும்போது,” இந்தத் தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும். இதிலிருந்து  மீள  என்ன செய்ய வேண்டும் என்பதை  கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக உணருகிறேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |