அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் .
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார்.
இதையடுத்து 3-வது செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்ற, 4-வது செட்டை 6-0 என்ற சிட்சிபாஸ் கணக்கில் கைப்பற்றினார் .இதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா போராடி வென்றார் .இறுதியாக 6-3, 4-6, 7-6, 0-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற கார்பியா 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதனால் அதிர்ச்சி தோல்வியடைந்த சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.