Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் …. ரஷ்யாவின் மெட்வதேவ் ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர்  டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார் .

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை  சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் .

இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் .இறுதியாக 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில்  ஜோகோவிச்சை வீழ்த்தி வெற்றி பெற்ற மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் .இதன்மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories

Tech |