Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் எம்மா ராடுகானு அசத்தல் வெற்றி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை  எம்மா ராடுகானு , கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸை எதிர்த்து மோதினார்.

இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எம்மா ராடுகானு வெற்றி பெற்றார் .இப்போட்டி .சுமார் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.

Categories

Tech |