Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : ரஷ்ய வீரர் மெட்வதேவ் …. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு  அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ், கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை  எதிர்கொண்டார்.

இதில் 6-4, 7-5, 6-2  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற  மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து நாளை நடைபெற உள்ள  இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது  ஸ்வரெவுடன் , மெட்வதேவ் மோத இருக்கிறார்.

Categories

Tech |