யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவும் , பிரிட்டனை சேர்ந்த டேன் இவான்சும் மோதிக் கொண்டனர்.
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினர் . இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய மெட்வதேவ் அடுத்தடுத்த செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியாக 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.