Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை தகனம் செய்தனர். மோடியின் தாயார் மரணத்திற்கு உலக  தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீரா பென் மரணத்திற்கு நானும் என் மனைவியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். இந்த கடினமான நிலையில் பிரதமருக்காகவும், அவரின் குடும்பத்தினருக்காகவும் நாங்கள் பிரார்த்தித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |