Categories
உலக செய்திகள்

ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்…. நான் இருக்கும் வரை நடக்காது… எச்சரித்த டிரம்ப்!

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக, ஈராக், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் உச்சகட்ட பதற்றம் நிலவிவருகிறது.

Image

இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்துவருகிறது. அணு ஆயுதத்திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை.

Image result for Lawmakers say briefing on reason for Iran strike 'utterly unconvincing'

மேலும் பேசிய அதிபர் டிரம்ப், நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது. ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ராணுவ தளம் மட்டுமே சிறிது சேதமடைந்தது என்று தெரிவித்தார்.

Categories

Tech |