அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த செல்ல பிராணியான நாய் இறந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார். அதோடு ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தனது செல்லப் பிராணிகளான “சாம்ப் மற்றும் மேஜர்” இரண்டு “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். அதில் நேற்றுமுன்தினம் சாம்ப் திடீரென இறந்துள்ளது. அதை அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் அந்த டுவிட்டில் கூறியிருப்பது யாதெனில், செல்லப் பிராணிகளாக தங்களது குடும்பத்தில் வளர்ந்து வந்த இரண்டு நாய்களில் சாம்ப் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சாம்ப் கடந்த 13 வருடங்களாக தங்களின் வீட்டில் ஒரு துணையாக இருந்து வந்ததாகவும், கவலையான நேரங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் சாம்ப் தங்களுடன் இருந்தது என்பதையும் பதிவு செய்துள்ளார்.