Categories
உலக செய்திகள்

படை வீரர்களை திரும்ப பெறும் முயற்சி..! வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தங்களது படை வீரர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறும் நடவடிக்கையில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசும் அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இந்நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை வருகின்ற 25-ஆம் தேதி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு நாட்டு தலைவர்களிடையே நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பு அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெற்று கொண்டிருக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தலிபான்கள் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பான ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. நியூயார்க் நகரில் கடந்த 2001, செப்டம்பர் 1-ஆம் தேதி இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்துள்ளனர்.

அதன் பிறகு 2,400 அமெரிக்க வீரர்கள் இதுவரை ஏற்பட்ட மோதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கான் ராணுவத்தினர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தோஹாவில் வைத்து ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டி அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

Categories

Tech |