அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவியுடன் இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணியை லண்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார். கருப்பு ரேஞ்ச் ரோவரில் கம்பீரமாக மகாராணியை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எலிசபெத் ராணியுடன் சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு மீண்டும் ஹெலிகாப்டரில் ஏறி விமான நிலையத்திற்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஊடகங்களிடம் பேசியிருப்பது யாதெனில், பிரித்தானிய மகாராணியின் நடத்தையும் தனித்தன்மையும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாகவும், எனது இந்த கருத்து மகாராணியாரை அவமதிப்பதாக இருக்காது என்று தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெள்ளை மாளிகைக்கு ஒரு முறை வந்து செல்லுமாறு மகாராணியாருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மகாராணியார் சீன ஜனாதிபதி ஜின்பிங் பற்றியும், ரஷ்ய ஜனாதிபதி புடின் பற்றியும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மகாராணியாரை விண்டசர் கோட்டையில் சந்திக்கும் 4-வது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆவார்.
மேலும் முதன் முதலாக பிரித்தானிய மகாராணியார் ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரை சந்திக்கும்போது ஜோ பைடன் எட்டு வயது சிறுவனாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் 1982-ல் ரீகன்ஸ், 2008-ல் ஜார்ஜ் டபிள்யூ புஷ், 2016-ல் ஒபமா, 2018-ல் டிரம்ப் ஆகியோர் எலிசபெத் ராணியை முன்னதாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.