Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அதிபராக டிரம்ப்… “வெளியிட்ட உருக்கமான கடைசி வீடியோ”..!!

அமெரிக்க அதிபராக இன்று கடைசி நாள் என்பதால் டிரம்ப் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவை பாதுகாப்பாகவும், நலமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மேல் ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கிறார்.

இன்று அதிபராக பதவி வகிக்கும் கடைசி நாள் என்பதால் உருக்கமான வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இவ்வளவு நாள் அமெரிக்காவின் அதிபராக பணியாற்றியதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். தற்போது புதிய நிர்வாகம் தனது பணிகளை தொடங்க உள்ளது. அவர்கள் அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருக்க நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

மிக முக்கிய விஷயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அமெரிக்கர்கள் தங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நற்பண்புகளுடன் ஒன்றுபடவேண்டும். இதன் மூலம் பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

Categories

Tech |