Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்..

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

உலகளவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனாவின் கோர பசிக்கு அமெரிக்கா தான் அதிக மக்களை இழந்துள்ளது.. அமெரிக்காவில் இதுவரை 39,015 பேர் பலியாகியுள்ள நிலையில், 7,38,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கொரோனா பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பலி எண்ணிக்கை 3,342ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் அது 4,632ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா வெளியிட்ட புள்ளி விவரம் சொல்கிறது.

இது சீனாவின் போலி முகத் திரையை கிழித்தெறிந்துள்ளது. இதற்க்கு அந்நாட்டு அரசு மரண எண்ணிக்கையை அரசுக்கு சரியாக சொல்லவில்லை” என மருத்துவர்கள் மீது பழிபோடுகின்றது. வீட்டில் இறந்தவர்கள் கணக்கு எங்களுக்கு வரவில்லை. மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்கிறதில் ரொம்ப கவனமாக இருந்த காரணத்தினால் அரசுக்கு எத்தனை பேர் மரணமடைந்தார் என சொல்ல தவறிவிட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக தங்களது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை சீனா தெரிவிக்கவில்லை என்றும், இதன் காரணமாகத் தான் நான் சீனா குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றும்  கூறினார்.

Categories

Tech |