Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்!

நியூயார்க் மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரரும் அமெரிக்காவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவருமான ராபர்ட் ட்ரம்ப் இன்று(ஆகஸ்ட் 16) உயிரிழந்தார்.

இந்நநிலையில், ராபர்ட் ட்ரம்ப் சிகிச்சைப் பலனிற்றி நியூயார்க் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தர். இது குறித்து சகோதரரின் மரணம் குறித்து பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “ “எனது அன்புச் சகோதரர் ராபர்ட் இன்று நள்ளிரவு காலமானார் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் எனது சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பரும் ஆவார். அவரது இழப்பு எனக்கு கடினமாக இருக்கும். எனது இதயத்தில் ராபர்ட்டின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |