Categories
உலக செய்திகள்

இது தான் முதல்முறை..! சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர்… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவியேற்புக்கு பின் முதல் முறையாக 8 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8 நாட்கள் ஐரோப்பாவில் சுற்றுபயணம் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து பிரிட்டனில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டிலும் அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை, பிரஸ்ஸல்சில் நடைபெற உள்ள நேட்டோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வருகின்ற 16-ஆம் தேதி ஜெனிவாவில் சந்திப்பது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளிலும் ஜோ பைடன் பங்கேற்கிறார். அதில் ஜோ பைடனின் ரஷ்ய அதிபருடனான சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டரம்ப் பணிபுரிந்த நேரத்தில் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் சிறிது விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த விரிசலானது தற்போது ஜோ பைடனின் இந்த பயணத்தால் சரியாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |