வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதற்கு அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.
வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழுவீச்சில் செலுத்த சோதனை மேற்கொண்டிருப்பதாகவும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளும் அதற்குரிய முயற்சிகள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. கடந்த 2020 ஆம் வருடம் இராணுவ அணிவகுப்பு நடந்த சமயத்தில், ஹ்வாசோங்-17 என்ற வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
அந்த ஏவுகணை ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா, தற்போது அந்த ஏவுகணையை சோதனை செய்ய தயாராகி உள்ளது என்றும் கடந்த மாதம் 26ஆம் தேதி மற்றும் கடந்த 4-ஆம் தேதி 2 சோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது. எனவே, அமெரிக்கா, வட கொரியா மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.