Categories
உலக செய்திகள்

காபூலில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் பலி.. தவறான தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்கா..!!

காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்க படை, கடந்த 29-ம் தேதி அன்று நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அமெரிக்க அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தங்கள் குடிமக்களோடு, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் சேர்த்து விமானம் மூலம் மீட்டுவிட்டது. இதனிடையே மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடந்த சமயத்தில், கடந்த மாதம் 26ம் தேதியன்று, அங்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின், ஹரசன் பிரிவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.

இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 169 நபர்களும், அமெரிக்கப்படையின், 13 இராணுவ வீரர்களும்  பலியாகினர். எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்கப் படையினர், “ட்ரோனை” பயன்படுத்தி, வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இதில், தீவிரவாதிகள் உட்பட 10 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அமெரிக்காவின் இந்த தாக்குதலில், குழந்தைகள் 7 பேர் உட்பட, பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக, பலியானதாக ஆப்கானிஸ்தான் மக்கள் கூறினார்கள். இந்நிலையில், அமெரிக்க அரசு, தாங்கள் நடத்திய தாக்குதலில், அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் பலியானதை, முதல் தடவையாக ஒப்புக்கொண்டிருக்கிறது.

மேலும், தீவிரவாதிகள் என்று கருதி, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது, சோகமான தவறு என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்க அரசு சார்பில், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உட்பட மக்கள் மீது தவறாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியான, லாய்ட் அகஸ்டின் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

Categories

Tech |