நிலவில் உள்ள இலகுரக உலோகத்தை எடுப்பதற்காக அணுகுண்டை வெடிக்க வைக்க சுரங்கம் உண்டாக்குவதற்கு அமெரிக்கா திட்டம் மேற்கொள்வதாக ரகசிய ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களின் மூலமாக நிலவை அணுக பயங்கரமான ஒரு திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென்று அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் திரெட் ஐடென்டிபிகேஷன் புரோகிராம் அதிகாரிகள் விண்வெளிக்கு அணு வெடிபொருட்களை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்த சோதனை செய்யப்படாத திட்டங்கள், எந்த வகையில் நம்பகத் தன்மை உடையதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி மேற்கொள்வதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அணு வெடிப்புகளின் மூலமாக நிலவில் ஒரு துளையை இட திட்டமிடப்பட்டிருக்கிறது. மிகவும் இலகுரக உலகங்களை தேட இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு லட்சம் மடங்கு இலகுவான உலோகங்கள் மறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சுரங்கம் தோண்டுவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வெடிக்கும் லென்ஸ் மூலமாகத்தான் பாறைகளை உடைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலவில் அணுகுண்டை வெடிக்க செய்வதற்காக புராஜெக்ட் A119 என்ற உயர் ரகசிய திட்டமானது கடந்த 1950 ஆம் வருடங்களிலே திட்டமிடப்பட்டிருக்கிறது.