அமெரிக்க அரசு, இந்தோனேசியாவிற்கு கோவேக்ஸ் திட்ட அடிப்படையில் விரைவாக சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தங்கள் நாட்டிலிருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டத்தை உருவாக்கி தடுப்பூசி வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் சமீப நாட்களாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே அடுத்த வருடம் மார்ச் மாத இறுதிக்குள், நாட்டில் உள்ள 27 கோடி மக்களில் 18 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது.
இதனையடுத்து, அந்நாட்டில் மாடர்னா தடுப்பூசி அவசரகால உபயோகத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சரான ரெட்ரோ மார்சிடியிடம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, ஜேக் சுல்லிவான், இந்தோனேசியாவிற்கு மாடர்னா நிறுவனத்தின் 40 லட்சம் தடுப்பூசிகள் விரைவாக வழங்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.