இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார்.
இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் அமெரிக்கா, இந்தியாவிற்கு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு கிடைத்ததற்கு ஆதரவளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது பற்றி தெரிவித்ததாவது, எங்களுடன் வலுவான நட்புறவு கொண்ட நாடு இந்தியா.
எரிசக்தி, உணவு நெருக்கடி, பருவநிலையில் ஏற்படும் மாற்றம் போன்ற சவால்களை சந்திக்கும் நேரத்தில் ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்க இருக்கும் இந்தியா மற்றும் என் நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் ஆதரவை வழங்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.