மருத்துவமனையில் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியில் மகாத்மா காந்தி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நோயாளியின் கட்டிலுக்குள் திடீரென பாம்பு புகுந்துள்ளது. இந்த பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்து வெளியே விட்டனர். இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.