அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ்-க்கு வாஷிங்டனில் இரண்டு படுக்கை அறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு ஒன்று இருந்துள்ளது. அந்த வீட்டினை கமலா ஹாரிஸ் 2017-ஆம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கி தற்போது அதனை 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட்-ஐ கமலா ஹாரிஸ் ஏற்கனவே 8.6 லட்சம் டாலருக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கமலா ஹாரிஸ் இந்த வீட்டினை 2.99 லட்சம் டாலருக்கு 1998-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கமலா ஹாரிஸ்-க்கு இன்னும் பல வீடுகள் இருப்பதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3,500 சதுர அடியில் 3.2 மில்லியன் மதிப்பில் வீடு ஒன்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கமலா ஹாரிஸ் தற்போது துணை ஜனாதிபதிக்கான வீட்டில் தான் வசித்து வருகிறார்.