Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. பிகில் படம் 300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளித் குவித்ததால், வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என அண்மையில் விஜயின் வீட்டில் வருமான வரித்துறையினரால் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் சோதனையில் அப்படி எதுவும் சிக்கவில்லை.

இவை ஒரு புறமிருக்க, சமூக வலைத்தளமான யூடியூப்பில் வெளிநாட்டவர்கள் பலரும் இந்திய பாடல்களை ரசித்து வருகின்றனர்.. மேலும் பாடல் மற்றும் நடிகர் குறித்தும், தமது கருத்துக்களை பகிர்வது வழக்கமான ஒன்றாக தற்போது காணப்படுகின்றது.

அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இண்டி ரோசி (indi rossi) என்ற பெண் ஒருவர், விஜயின் வெறித்தனம் பாடலை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில், ‘பாடலில் இசை மற்றும் நடனம் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜயின் கியூட்டான முகபாவனையும் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |