அமெரிக்காவில் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது தன்னிடம் பிரச்சனை செய்த நபரை ஆசிய பெண்மணி கட்டையால் அடிவெளுத்து வாங்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் ஒருவர் ஆறு ஆசிய பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்காத நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ஆசிய மக்களை அமெரிக்க நாட்டினர் வெறுக்கின்றனரா ? என்ற எண்ணம் தோன்றும் வகையில் அமைந்துள்ளது. சியாவோ ஜென்ஸி என்ற ஆசிய பெண் பிரான்சிஸ்கோவில் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருக்கும் பொழுது 39 வயதான ஒரு நபர் அந்தப் பெண்ணின் முகத்தில் குத்தியுள்ளார்.
அவர் குத்தியதில் கண்ணில் காயம்பட்ட சியாவோ ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த கட்டையை எடுத்து அடி வெளுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சியாவோ ஜென்ஸியை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுக்கவில்லை எனில் மேலும் அடிவெளுத்து வாங்கி இருப்பார் என அவர் கூறும் வார்த்தைகளில் தெரிகிறது.
அந்த நபரை காவல்துறையினர் ஸ்ரெச்சர்ல் கொண்டு செல்லும்போது சியாவோ ‘‘ஏய் நான் சாலையை கடக்க தானே நின்றேன்”… ”என்னை ஏன் குத்தினாய்” என அழுகையுடனும், கோபத்துடனும் மெக்சிகோ கதறும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காட்சியை பார்க்கும்போது சியாவோ எந்த அளவு மனவேதனைக்கு உள்ளாகியிருப்பார் என்பதை அனைவராலும் உணர முடிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/DennisKPIX/status/1372241168663076864