அமெரிக்காவில் பெண் ஒருவர் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தது.
அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் பாராகவ்வுள்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதான பிரிட்டனை கிரே என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமுற்று உள்ளார். ஏற்கனவே கிரே 18 வயது உட்பட்ட சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை பார்த்த நபர் செப்டம்பர் 29, 2020 அன்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கு முன்பே அர்கான்சஸ் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கு இதே போல இரு புகாரை வேறொரு நபர் பிப்ரவரி 2020ல் புகார் அளித்துள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் கிரேவை போலீசார் கைது செய்தது. ஆனால் வியாழக்கிழமை அன்று 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தி அவரை விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவரை வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இவருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையில் இருக்கும் தகவல் பற்றி வெளியிடவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.