அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியதால் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு சரியான தீர்வு தடுப்பூசியை கண்டுபிடிப்பதுதான் என்று இருக்கும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து அதற்கான பரிசோதனையிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பு மருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 6 தடுப்பூசித் திட்டங்கள் சுமார் 74 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.