அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் இந்தியாவை விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு என்பது மிக பலமாக இருந்தது. இந்திய நாட்டின் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒருவருக்கொருவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பாராட்டி பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் எப்போதும் பிரதமர் மோடியை உற்ற நண்பன் என்றும், இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடு எனவும் கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலுக்காக இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தை மறைப்பதாகவும், உலகளவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் தான் காரணம் என்றும் விமர்சித்துள்ளார்.