ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் சீனாவிற்கு ஏற்ப அமெரிக்கப் படைகள் மாற்றியமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்
ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறுகையில், தற்போது சீனாவால் வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன ராணுவத்தை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்காவின் உலகளாவிய ராணுவ நிலைகள் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கேற்ப உலகின் பல பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க படைகளை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். களத்தில் இருக்கும் நிலவரத்திற்கு ஏற்ப அமெரிக்க படைகள் மாற்றி அமைக்கப்படும் என அவர் விளக்கமம் அளித்துள்ளார்.