கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைய மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, தடுப்பூசி குறித்தும், உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்தும் அமெரிக்க அதிபர்ட்ரம்ப் சமீபத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதிலும், அதை பொது மக்களுக்கு வழங்குவதிலும் WHOவுடன் இணைய மாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார், மேலும் கொரோனாவுக்கு காரணமான சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளதாகவும், கொரோனாவை தோற்கடிக்க தேவையான நடவடிக்கையை அமெரிக்கா முயற்சிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.