Categories
உலக செய்திகள்

கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இரண்டு பெரும் தாக்குதலை காட்டிலும் கொரோனா அதிக அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து 3 கோடி அமெரிக்கர்கள் வேலை இன்றி நிவாரணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. வெளியான அறிக்கையில், ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் உயிக்கொல்லியான கொரோனா தொற்றினால் தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணிக்கப்பட்டிருந்தது. அதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் இந்த தொற்று தாக்குதலுக்கு ஆளாவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை , “கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள், புத்திசாலித்தனமான யதார்த்தத்தை சுட்டிக்காட்டியுள்ளது.  அதேநேரம் அமெரிக்கா பதுங்கி இருக்கின்றது. கடந்த 7 வாரத்தின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் இல்லை. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமானதாக்கும்” என கூறியுள்ளது.  இதனிடையே உள்நாட்டின் வரைவு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் நிராகரித்துள்ளது.

அதே சமயம் வரைவு அறிக்கையை தயார் செய்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜட் டீரெ கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிக்கை, வெள்ளை மாளிகை ஆவணமோ, கொரோனா தொற்று பணி குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமோ இல்லை . இந்த தகவல் பணிக்குழு அல்லது தகவல்களால் செய்யப்பட்ட எந்த மாதிரியையும் பிரதிபலிக்காது” என குறிப்பிட்டார். அதோடு “அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது என்பது விஞ்ஞான உந்துதல் அணுகுமுறை. இது கூட்டாட்சி உயர் சுகாதார மற்றும் தொற்றுநோய் நிபுணர்கள் ஒப்புக்கொண்டது. அமெரிக்க மக்களின் நலனில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்” என குறிப்பிட்டார்.

பியர்ல் ஹார்பர் இரட்டை கோபுர தாக்குதல்களை விட அமெரிக்காவில் கொரோனா பெறிய அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் வேதனை  தெரிவித்துள்ளார். 1941 ஆம் ஆண்டு ஜப்பான் பியர்ல் ஹார்பர் துறைமுகம் மீது குண்டு வீசிய பின்னரே இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா களமிறங்கியது. 2001 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருக்கும் இரட்டை கோபுரங்களை அல்-குவைதா பயங்கரவாதிகள் தகர்த்த பின்னரே அமெரிக்கா ஆப்கானிஸ்தானுள் நுழைந்து தலிபான்களுக்கு எதிராக போர் தொடுத்தது. இவ்விரண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டி இதனைவிடவும் கொரோனா தொற்று மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அமெரிக்கா இதுவரை சந்தித்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |