இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம்.
மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும்.
அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது உங்கள் வாழ்க்கையை நீங்களே அழித்துக்கொள்வதற்கு சமமாகும். எக்காரணத்தை கொண்டும் இந்த மாதிரியான உறவுகளை அருகில் வைத்து கொள்ளாதீர்கள். உங்களின் உடல்நலம், மனநலம், உணர்ச்சி நிலைகளை பாதிக்க செய்யும் எந்தவொரு காதலும் மிகவும் ஆபத்து நிறைந்தவை தான். இது ஆண், பெண் இருவருக்குமே 100% பொருந்தும் என்பதும் உண்மை.
எமோஷனலாக பயமுறுத்துவது:
உணர்ச்சி பூர்வமாக மிரட்டுவார்கள், அல்லது அவருடன் இருக்குமாறு பயமுறுத்துவது இப்படி பட்ட காதலை நீங்கள் மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள். ஏனெனில் உங்களை கையாளவும், மனதை மாற்றவும் அன்பை எப்படி ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது என்றும் தெளிவாக அணு அணுவாக தெரிந்து வைத்திருப்பார்கள். ஆரோக்கியமான ஒரு உறவில் அத்தகைய நச்சு நிறைந்த அன்பையோ அல்லது வினோதமான சூழ்நிலையையோ நீங்களஉணர்ந்தது மட்டுமின்றி அனுபவிக்கவும் மாட்டிர்கள். நல்ல காதலர் ஒருபோதும் உங்களை எதிலும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
எப்போதும் பின்தொடர்வது:
பொதுவாக காதல் என்றாலே நம்பிக்கையை சேர்ந்தது. ஆனால் நம்பிக்கை இல்லாமல் அவர்களின் மீது சந்தேகப்பட்டு அவர்களின் செயலை எப்போதும் கண்காணிப்பதை வேளையாக கொண்டிருப்பார்கள். உங்கள் காதலரின் பின்தொடரும் நடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் இருக்குமிடத்தை கண்காணிப்பது போன்று எளிமையான ஒன்றில் தொடங்கி, உங்களுக்கேத் தெரியாமல் நீங்கள் செல்லும் இடத்திற்கு பின்தொடர்வது வரை செல்லலாம். உங்கள் காதலரின் இந்த நடத்தை மிகவும் ஆபத்தானது.
உங்கள் மொபைல் பாஸ்வேர்டுகளை கேட்டு கட்டாயப்படுத்துவது:
உங்கள் காதலன்/காதலி உங்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸப் உரையாடலை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களா? உங்களின் பாஸ்வேர்டுகளை சொல்லும்படி தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார்களா?இதுவே உங்களுக்கு எளிதில் காட்டிக்கொடுத்து விடும் நீங்கள் எப்படி பட்ட ஒருவரை நேசிக்கிறீர்கள் என்று. . நீங்கள் சொல்லாத பட்சத்தில் அவர்கள் உங்களை உணர்ச்சிரீதியாக துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்கள் மீதான வெறித்தனமான காதலில் என்ன வேண்டுமென்றாலும் செய்ய கூடும்.
எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பது:
பெரும்பாலான உறவுகள் ஆரம்பத்தில் சரியான தொடக்கத்துடன் தான் கொண்டு செல்லும். அப்போது காதலர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அனைத்திற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. அதிகப்படியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தொல்லை சொல்ல தொடங்குவது கூட ஆபத்திற்கு தொடக்கமாகும்.
ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்பது, அதனை சொல்ல வேண்டும் என்று நச்சரிப்பது, ஒவ்வொரு நிமிடமும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது எப்போதும் அவர்களை சுற்றியே இருக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் ஆபத்தான காதல் என்றே கூறலாம்.
அதிக பொறாமை:
பொறாமை ஒரு வெறித்தனமான காதலின் முக்கியமான அறிகுறியாகும். யாரோ ஒருவர் உங்களைப் பாராட்டுவது அல்லது நண்பர்களுடன் ஒரு மாலை நேரத்தை செலவிடுவது போன்ற அற்ப காரணங்களுக்காக உங்கள் பங்குதாரர் புண்படுத்தினால் அல்லது பொறாமை அடைந்தால் அதை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் தனது விருப்பங்களை பூர்த்தி செய்ய சந்தேகத்துடன் செயல்படத் தொடங்கும் போது பொறாமை மற்றும் பாதுகாப்பின்மை மோசமடைகிறது. அத்தகையவர்களை காதலிக்காமல் தவிர்ப்பது நல்லது.
தனிப்பட்ட விருப்பங்களுக்கு மரியாதை இல்லை:
ஒரு ஆபத்தான காதலரின் பொதுவான பண்பு என்னவென்றால் அவர்களுக்கென்று சொந்த வாழ்க்கை எதுவும் இருக்காது. ஒருவர் எப்பொழுதும் உங்கள் அருகிலேயே இருந்து அணைத்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட வேறு யாருடனும் பழகுவதற்கு நேரமே தராமல் எப்போதும் உங்களுடனேயே அவர்கள் இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்தும்.உங்கள் விருப்பங்களை மதிக்காத ஒருவருக்கு உங்கள் வாழ்க்கையில் இருக்க இடம் வழங்காதீர்கள்.
எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பது:
நாம் அனைவரும் சில நேரங்களில் மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் நடத்தைகளை விமர்சிப்போம். ஆனால் அது அடிக்கடி மற்றும் புண்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கத்துடன் செய்யப்படும்போது, அது ஆரோக்கியமற்றது. விமர்சனம் செய்பவர்கள் உங்களை தகுதியற்றவர்களாகவோ உணரவைக்கிறார்கள். அவர்கள் உங்களை, உங்கள் எண்ணங்கள், உங்கள் நடத்தைகள் மற்றும் உங்கள் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அவமதிக்க கூடும். இவர்களை காதலிப்பது உங்களின் வாழ்க்கையை நரகத்தை விட மோசமாக்கும்.
நேர்மையின்மை:
காதலில் நேர்மையின்மை என்பதற்கே இடமில்லை. நேர்மையற்ற தன்மை இயல்பாகவே தவறு மட்டுமின்றி, அது இரண்டு நபர்களிடையே இருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடுகிறது. பொய்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்துவிடலாம். ஆனால் அதிகப்படியான பெரும்பாலும் வெளிப்படையான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். தங்களின் சொந்த முக்கியத்துவத்தை அதிகரிக்க அதிகப்படியான பொய்களை கூறுபவர்கள் உண்மையிலேயே ஆபத்தானவர்கள். அப்படிப்பட்டவர்களை காதலிக்கும் போது நீங்கள் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.