Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை.

தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் சொல்லிக் கொடுக்கிறதுலையும் யாரும் எதிர்ப்பு சொல்லல. அதோடு மட்டுமல்ல காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாக குழுவில தமிழ் உறுப்பினர் இருக்காரு. இந்த மாதிரியா நான் ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்.. கற்பனையா… தமிழ்நாட்டில் சென்ட்ரல் யூனிவர்சிட்டிஸ் இருக்கு.

அதுல சமஸ்கிருத கவி காளிதாசுக்கு ஒரு இருக்கை,  சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு ஒரு ஆசிரியர் நியமிச்சா…  இந்த சில்லு வண்டி பயலுக எல்லாம் சும்மா இருப்பாங்களா ? தமிழருக்கு மட்டும்தான் மொழி வெறுப்பு போதிக்கப்பட்டு, அவன் மண்டையில் திணிக்கப்பட்டிருக்கிறது.மற்ற மாநிலத்தில் இருப்பவர்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் மற்ற மொழியை பற்றி கிடையாது.

ஆனால் தமிழ்நாட்டுல திராவிடியன் ஸ்டாக், தமிழ்ல காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா..  தமிழ் விரோதிய…  தந்தை பெரியார் என்று சொல்லக்கூடியவர்கள் மற்ற மொழிக்கு எதிரா மொழி வெறுப்பு. எம்மதமும் சம்மதம்னு சொன்னா…  எம்மொழியும் நம் மொழினு சொல்றதுதான் சரி. உங்களுக்கு ஈவேராவோட திராவிடியன் ஸ்டாக், மண்டைக்குள்ள பூந்துருக்கு அதனால காழ்ப்புணர்வு என  நீங்க பேசுறீங்க என தெரிவித்தார்.

Categories

Tech |