Categories
தேசிய செய்திகள்

“மாட்டு சிறுநீர்” பினாயிலை பயன்படுத்துங்க…. “சிறந்த கிருமிநாசினி”…. மத்திய பிரதேச அரசின் ஐடியா…!!

மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை தயாரித்து பயன்படுத்த மத்திய பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது.

பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவை மிகச் சிறந்த கிருமி நாசினி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையடுத்து பாஜக அரசு கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறைகு மாட்டின் கோமியத்தை வழங்கியுள்ளது. இதன் மூலமாக மக்கள் இனி பால் கொடுக்காத மாடுகளை கைவிட மாட்டார்கள் எனவும், விற்பதை  தவிர்ப்பார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் இந்த பினாயிலை மட்டுமே அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்த பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொது நிர்வாகத் துறை செயலாளர் நிர்வாஸ் சர்மா இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். கெமிக்க மூலமாக தயாரிக்கப்படும் பினாயிலுக்கு பதிலாக மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படும் இவற்றை வைத்து தான் அரசு அலுவலக வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும். முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக முதன்முதலாக அமைச்சரவை என்று தனியாக ஒன்று உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |