Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கை உஷாரா யூஸ் பண்ணுங்க…! 35,000 தடவை கேட்ட மத்திய அரசு… !!

2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டின்  முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக்  சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகமாகும். உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை கோருவதில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில், உலகில் 10 நாடுகளில் மொத்தமாக 53 முறை இணைய சேவை வசதிகள் முடக்கப்பட்டதால், பேஸ்புக் நிறுவன சேவைகள் தடைப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 42 முறை இணையம் முடக்கப்பட்டு, சேவைகள்  தடைபட்டதாக கூறியுள்ளது.,

Categories

Tech |