இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நகர்ப்புறங்களை போன்று கிராமத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி என்ற சிறிய கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் சென்றிருந்தனர்.
இதையடுத்து ஊழியர்கள் பரிசோதனைக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து கிராமங்களுக்கும், அதிகாலையிலேயே வேலைக்கும் சென்று விட்டனர். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். ஆனால் பரிசோதனைக்கு சென்றிருந்தபோது மக்கள் சிலர் மட்டுமே அங்கு இருந்தனர். பரிசோதனைக்கு பயந்து கிராம மக்கள் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெலகாவி மாவட்டம் கங்கிராலி கிராமத்தில் 140 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 பேர் உயிர் இழந்தனர்.