வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்றே கூறலாம். வெங்காயம் சமையலுக்கு மட்டும் தானா? இந்த வெங்காயத்தை தலைமுடியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் முடி உடைவது போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். து நிச்சயம் நல்ல பலன்களை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வெங்காய சாறு ஹேர் வாஷ்
தேவையான அளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு அரைத்து சாரி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின் சியக்காய் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும்.
வெங்காய சாறு மசாஜ்

வெங்காயம் மற்றும் முட்டை
தேவையான வெங்காயத்தை எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை தலையின் வேர் பகுதியின் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் சியக்காய் தேய்த்து முடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒரு முறையாவது செய்தால் முடி நன்கு வளரும்.
வெங்காயம் மற்றும் எலுமிச்சைபழம்
தேவையான வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை பழத்தை தோலுடன் பொடியாக நறுக்கி இரண்டையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் சிறிது நேரம் கழித்து தலையை சியக்காய் தேய்த்து நன்கு அலசி விடவும். இப்படி வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும். பொடுகு தொல்லை நீங்கும்.