Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முறையாக பயன்படுத்தனும்… பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை… வேளாண் இணை இயக்குனர் ஆய்வு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மேலகிடாரம், பீ. கீரந்தை, மூக்கையூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வழங்கிய பண்ணை இயந்திரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறைகளை வேளாண்மை அலுவலர் கிருத்திகா, தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் செய்து காண்பித்துள்ளார். மேலும் இந்த ஆய்வில் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தர வள்ளி மற்றும் வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |