பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர்
பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது.
ஏர்டெல் சிம் கார்டை வெளியே எடுத்துவிட்டு 30 நொடிகளுக்கு பிறகு மீண்டும் மொபைலில் பொருத்தினால் பிரச்னை சரியாகிவிடும். அப்படியும் சரியாக வில்லையென்றால் சிம் கார்டை வேறொரு செல் போனில் பிரச்சனையை சரி செய்ய உதவியாக இருக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் பயனாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.