கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.
கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள்.
இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்த இந்த கருஞ்சீரகத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். எளிமையான இந்த பொருள் மூலம் வீட்டிலேயே நாம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தலாம். குறிப்பாக பெண்களுக்கு குழந்தைப் பேறுக்குப் பின் கர்ப்பப்பையில் கசடுகள் இருக்கும். இவற்றை சுத்தப்படுத்துவது அவசியமாகிறது.
அப்போதுதான் மீண்டும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படாது. இதற்கு கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து நீரிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.
அதோடு இந்த கருஞ்சீரகம் புற்றுநோய், சீறுநீரகக் கல், ஆஸ்துமா, வயிற்றுப் புண் போன்று பல நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.