இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தன்னுடையதாக்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுடைய ஆட்டம் தான். அவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. இதையடுத்து அஸ்வின் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வைத்து அஸ்வின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.
இதையடுத்து அஸ்வினின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு யார் செய்த வேலை? என்று அஸ்வின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் வாயில் விரலை வைத்து உஷ் என்று வாயில் விறல் வைத்திருக்கும் போஸ்டர் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இந்த புகைப்படத்திற்கு பதிலாக அஸ்வின் போட்டோவை மாற்றி வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.