உலக சுகாதார நிறுவனம் இளைஞர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால்,
அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல துறை அமைப்புகள் எச்சரித்து வந்தன. இந்நிலையில், அவர்களை தாண்டி இளைஞர்களையும் எச்சரிக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த கொரோனா பாதிப்பு இளைஞர்களுக்கு தற்போது அதிகப்படியாக உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த காலங்களைப் ஒப்பிடுகையில், கொரோனாவால் இந்த மாதம் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 20 to 40 வயதுக்குள்ள இளைஞர்களும் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு WHO அறிவுறுத்தியுள்ளது.