Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால்…. கல்லீரல் சரியில்லை என்று அர்த்தம்…. உடனே மருத்துவர்கிட்ட போங்க…!!

நம்முடைய உடலில் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிற உறுப்பு கல்லீரல். அதை உழைப்பு என்று கூட அதை சொல்ல முடியாது போராட்டம் என்று சொல்லலாம். அப்படி போராடும் ஒரு உறுப்பு தான் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் உடலில் யார் என்று பார்த்தால் அது அவனுடைய கல்லீரல் மட்டுமே. கல்லீரல் கெட்டுப் போனால் உயிர் வாழ வழி இல்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் வேலை செய்யாத வேளையில் கூட கல்லீரல் வேலையை செய்கிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பாதுகாப்பது நம்முடைய கடமை. கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று பார்க்கலாம்.

அறிகுறிகள்:

கல்லீரல் சரியாக இல்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி ஆகும்.

கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள், பார்வை குறைபாடு ஏற்படும்.

கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் தோலில் பாதிப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும்.

செரிமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடும் போது அதிகமான நெஞ்செரிச்சல் உண்டாகும்.

கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருந்தால் தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரலில் வீக்கம் அடையும். இதனால் வயிறு வீக்கம் அடையும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால் அது கல்லீரல் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறிகள்.

கல்லீரல் பாதிப்புகள் இருக்கும் சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து சருமத் தோலானது திட்டுதிட்டாக உடலில் ஆங்காங்கே வெள்ளையாக காணப்படும்.

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் கருமையான நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால் அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால் தொடர்ச்சியாக இருந்தால் கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள்.

எனவே இந்த மாதிரியான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் நீங்கள் உடனே மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

Categories

Tech |