டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் பெயர், எண் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ 6E – 2403, ஏர் ஏசியா 15 – 765 ஆகிய விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 24இல் இரவு 9.10க்கு ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்தவர்களுக்கும், டெல்லியில் இருந்து காலை 6.05க்கு சென்னை வந்த இண்டிகோ விமான பயணிகளுக்கும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ உதவி உள்ளிட்டவைற்றை தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.