வருடப்பிறப்பன்று மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டையொட்டி சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று ரகளையில் ஈடுபடுவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்துடன் தேவாலயங்கல் மற்றும் கோவிலுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்ககையானது இப்போதிலிருந்தே தொடங்கப்பட்டு சென்னை முழுவதும் அதிவேகமாக சென்ற வாகனங்கள் 175 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையானது புதிய வருடப் பிறப்பு நாள் அன்று நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை சாலைகளில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி துணை கமிஷனர் செந்தில்குமார், அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சாலையில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.