திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 62 வயதான இவர் BSNL-ல் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த செய்வாய் அன்று மாலை அருகில் உள்ள எஸ்பிஐ (SBI ) ஏடிஎம்-யில் பணம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் சற்று திணறிய நிலையில் பணம் எடுத்துள்ளார் உடனே ஏடிஎம் அறையில் ராஜேந்திரன் பின்னால் நின்று கொண்டடிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து ராஜேந்திரன் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுத்துள்ளார்.
ஆனால், அவருக்கு உதவிய அந்த நபர் ராஜேந்திரனிடம் கார்டை வாங்கி ஏடிஎம் மெஷினில் தேய்த்து விட்டு அதே மாதிரியான போலி SBI ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார்.இதை அவர் கவனிக்கவில்லை
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் அவரின் வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 14 ஆயிரம் வரை அந்த நபர் எடுத்துள்ளார். செல்போனிற்கு வந்த மெசேஜ்யை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார்.
பின்பு மோசடி குறித்து தெரியவந்துள்ள நிலையில் பதறிப்போன முதியவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து மோசடி நபரை தேடிவருகின்றனர்.