Categories
லைப் ஸ்டைல்

உஷார் மக்களே! பேப்பர் கப்பில் டீ குடிப்பதால்…. பிளாஸ்டிக் வயிற்றுக்குள் செல்லும்…. எச்சரிக்கை தகவல்…!!

பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஓட்டல் வரையிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பல பின் விளைவுகள் உண்டாக கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

இந்த கப்பில் சூடான பானங்களை ஊற்றிக் குடிக்கும் போது அதிலுள்ள மெழுகு கரைந்து நம்முடைய வயிற்றுக்குள் சென்று விடுவதால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

3 கப் டீ குடிப்பவர்கள் சுமார் 70,000 நுண்ணிய மைக்ரோ-பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

இளம் வயதிலேயே உடல் பருமன், தொப்பை, அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்துவதால் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

நாம் உண்ணும் உணவு வகைகளில் இருக்கும் அமிலத்தன்மை ,காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது பிளாஸ்டிக் உடன் சேர்ந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது.

பிளாஸ்டிக் பொருட்கள் சில வேதிபொருட்கள் இருக்கின்றன. அதே போல நம்முடைய உணவுப் பொருளிலும் சில வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றாக சேரும் போது உடலின் நச்சுத் தன்மை ஏற்படுத்துகிறது.

எனவே இவற்றிக்கு பதிலாக பித்தளை, சில்வர், அலுமினியம் பாத்திரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |